கோவையில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட போலீசார் - பொதுமக்கள் பாராட்டு

கோவை உக்கடம் புல்லுகாடு ஹவுசிங் யுனிட் பகுதியில் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்ட மாநகர காவல்துறையினரின் செயல் மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில், கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர், ஆர் எஸ் புரம் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து உக்கடம் புல்லுகாடு ஹவுசிங் யுனிட் பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.



மாநகர காவல்துறை மாநகராட்சி பணியாளர் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யுனிட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



அப்பகுதியில் கிடந்த குப்பைகள், தேவையின்றி வளர்ந்திருந்த செடிகளை அப்புறப்படுத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்தனர்.



தூய்மை பணி என்பது அனைவருக்கும் பொதுவானது. நமது இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறான முயற்சியை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...