கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது - 350 கிலோ குட்கா பறிமுதல்..!

காட்டூர் அருகே போலீசார் வாகன சோதனையின் போது, குட்கா கடத்தி வந்த 2 வட மாநில இளைஞர்கள் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் வாகன தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் சோமசுந்தரம் மில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுஜாராம், கோவிந்த் மீனா ஆகிய 2 வட மாநில இளைஞர்கள் மற்றும் செந்தில்வேல் என்ற சூரியா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 350 கிலோ குட்கா மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வாகன சோதனையில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...