ஆர்ப்பாட்டத்தில், மாணவர்களின் நாட்குறிப்பில் ஜாதியை எழுத சொல்லும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிஞ்சு மனதில் ஜாதி வெறியை விதைக்க கூடாது எனவும் வலியுறுத்தினர்.
கோவை: கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பள்ளி வீட்டுப்பாட கையேடுகளில் (Diary) ஜாதி பிரிவுகளை குறிப்பிட சொல்லுவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் அந்த தனியார் பள்ளிகளை கண்டித்தும் கோவை மாவட்ட கல்வித்துறையை கண்டித்தும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் நாட்குறிப்பில் ஜாதியை எழுத சொல்லும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் பிஞ்சு மனதில் ஜாதி வெறியை விதைக்க கூடாது என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட தோழமை கட்சிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளிகளிலும் UGC பல்கலைக்கழகங்களிலும் சனாதனம் நாட்டுக்கு பெரும் அவமானம் எனவும் வலியுறுத்தினர்.