ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை தீயிட்டு எரித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் வீரவணக்கம்..!

வீர மரணம் அடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில், ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட பிரிவுகளான 13, 25, 26, 372 ஆகியவற்றை தீயிட்டு எரித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்.


கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்ட பிரிவுகள் 13, 25, 26, 372 ஆகியவை ஜாதிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளதாக கூறி நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் பலரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.

அன்றிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்நாளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.



இதில் திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...