கோவையில் குடிநீர் விநியோகம், மழைநீர் வடிகால்‌ பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மற்றும் வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப்‌ பணிகள்‌, தார்சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.83க்குட்பட்ட திருச்சி சாலை, ஹைவேஸ்‌ காலனி, சுந்தரேசன்‌ லே-அவுட்‌ ஆகிய பகுதிகளில்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளார்கள்‌ ஈடுபட்டு வருவதை ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆய்வு செய்தார்.



மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படூத்தி தரம்‌ பிரித்து கொடூக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளார்களுக்கு அறிவுரை வழங்கினார்.



இதனையடுத்து சுந்தரேசன்‌ லே-அவுட்‌ பகுதிகளில்‌ பொதுமக்களிடம்‌ குடிநீர் விநியோகம்‌ குறித்து கேட்டறிந்த அவர், அப்பகுதியில்‌ உள்ள மழைநீர் வடிகாலை உடனடியாக தூர்வாரிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.3-க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட கூடுதல்‌ கழிப்பறைகளையும்‌, பள்ளியின்‌ சத்துணவு அறையில்‌ உள்ள உணவு பொருட்களின்‌ இருப்பு குறித்தும் ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார்.

பின்னர் வார்டு எண்‌.4-க்குட்பட்ட சின்னமேட்டூப்பாளையம்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டூத்திட்டத்தின் கீழ்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணியினையும்‌, வார்டு எண்‌.10-க்குட்பட்ட ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்‌ 75 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ வார்டு எண்‌.19-க்குட்பட்ட இராமகிருஷ்ணாபுரம்‌ பகுதியில்‌ 36 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ மழைநீர் வடிகால்‌ கட்டுமானப்பணிகளையும்‌, வார்டு எண்‌.30-க்குட்பட்ட கணேஷ்‌ லே-அவுட்‌ பகுதியில்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ 30 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ புதிதாக கழிவறைகள்‌ கட்டும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் ஆய்வு செய்தார்.

இதனைதொடர்ந்து வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10-க்குட்பட்ட ஷாஜகான்‌ நகரில்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ அரசு சார்பில்‌ நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டிகளில்‌ பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதனையடுத்து வார்டு எண்‌.10-க்குட்பட்ட பூந்தோட்டம்‌ நகரில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 67.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்‌ செப்பனிடப்பட்ட சாலையை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, வடக்கு மண்டல தலைவர்‌ கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கதிர்வேலுசாமி, கவிதா, சரண்யா, மண்டல உதவி ஆணையர்கள், உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...