திருப்பூரில் உள்ள ரயில்வே கூட்செட் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்கள் நிற்கும் இடங்களில் பிளாட்பாரம் இல்லாததால் சரக்குகளை ஏற்றி, இறக்குவதில் சிரமம் ஏற்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே சமதளமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் எனக்கோரியும் திருப்பூர் மாவட்ட ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள், ரயில்வே கூட்செட் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு அடையாள அட்டையை உடனடியாக வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும், வேலை நேரத்தை அதிகப்படுத்தக் கூடாது, சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.