அழிவின் விளிம்பில் உள்ள சப்போட்டா குடும்பத்தை சேர்ந்த மணில்கரா கௌகி மரம் - விதைகளை சேகரித்து எண்ணிக்கையை அதிகரிக்க இயற்கை ஆர்வலர்கள் முயற்சி

கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனை அருகே அழிவின் விளிம்பில் உள்ள மணில்கரா கௌகி மரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆரண்யா என்ற அமைப்பினர் அதன் விதைகளை சேகரித்து எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


கோவை: சப்போட்டா பழம் என்பது அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்றாகும். சப்போட்டா என்பது ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட சப்போட்டா குடும்பத்தின் ஒரு வகையாக உள்ள மணில்கரா கௌகி என்ற பழமையான மரத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.



இந்த பழமையான மரம் தற்போது போத்தனூர் ரயில்வே மருத்துவமனை அருகே கண்டறியப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த மரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.



இதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த ஆரண்யா என்ற வன அமைப்பின் நிறுவனர் சரவணன், இந்த மரத்தின் விதைகளை சேகரித்து அதைச் செடியாக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.



இவருக்கு உதவியாக கோவையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் பாரதிதாசன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் அதன் விதை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல சப்போட்டா பழம் நேரடியாக அதிகபட்சமாக அதன் மரத்தில் முளைக்காமல் ஒட்டு செடிகள் மூலமே முளைக்கிறது. ஆகவே சப்போட்டா பழத்தின் விளைச்சலை அதிகரிக்கவும் இந்த மரம் ஒட்டுச்செடிக்கு பயன்படுமென ஆரண்யா வனம் அமைப்பு உறுதி செய்துள்ளது.

மேலும் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை பழமையான இந்த மரத்தை பாதுகாப்பதும் மற்றும் இந்த மரத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் கடமை என அவ்வமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.



அழிவின் விளிம்பில் உள்ள ஒரு மரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எடுத்துள்ள முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...