மக்கள் விரோதப்போக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு இந்தியா



தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் சுப்ரமணி அறிவித்துள்ளார்.



இன்று காலை கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் சுப்ரமணி கூறியதாவது:-

மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை இந்தியாவில் வகுத்து வருகின்றது. திட்டங்கள் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ளாத மத்திய அரசு அதற்கு மாற்றாக மீண்டுமொரு புதிய சட்டத்தை செயல்படுத்துகிறது.

அதற்கு தக்க உதாரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே. வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு நாட்டுமக்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதியாக கூறினார். 

ஆனால் அதை செயல்படுத்த முடியாமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால் பல மக்கள் துன்புற்று வருகின்றனர். 

மத ரீதியான பிரச்சாரங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது. மாட்டுக்கறி உண்பவர்கள் தேசிய விரோதிகளாக வர்ணிக்கப்பட்டு வருகிறார்கள். 

அதோடு தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடமும் மதம் சார்ந்த சிந்தனைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

மேலும், ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல், பாமர மக்களிடத்தில் கேஷ் லெஸ் பரிவர்த்தனையை திணிப்பது போன்ற பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்திய அரசு செய்து வருகிறது.

இதை கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1 முதல் 25ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளோம். 

25-ம் தேதி தில்லியில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரை திரட்டி பேரணி நடத்த உள்ளோம். மேலும், மாநில அளவிலான பிரச்சனைகளை எங்கள் கட்சி கையில் எடுத்து போரடும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...