கோவை ராமநாதபுரம் சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் தனது இருசக்கர வாகனத்தில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோவையை நோக்கி திருச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திருச்சி சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி சந்திப்பு அருகே நந்தகோபால் வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நந்தகோபால் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு சென்ற கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.