உதகை முத்திரை பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பழங்குடியினர் வளர்ச்சி குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கினை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
நீலகிரி: உதகை அருகே முத்திரை பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6 வகையான பழங்குடியின மக்களின் புகைப்பட அருங்காட்சியகத்தைஅமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பழங்குடியினருக்கான 2 நாள் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதாக கூறினார்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பழங்குடியின மாணவர்கள் படித்து வருவதாகவும், திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் உள்ள 320 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா பள்ளிகளில் இந்த ஆண்டு மட்டும் நான்காயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்ய 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 16 ஆயிரத்து 570 பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி படிக்க 40 கோடியே 98 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
உயர் கல்வி முடித்த 21 ஆயிரத்து 381 பழங்குடியின மாணவர்களுக்கு 44 கோடியே 44 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரத்து 835 பழங்குடியினருக்கு வன உரிமை அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், 548 பேருக்கு சமூக உரிமை வழங்கி இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் உள்ள பழங்குடி இன மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 121 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் புதிதாக ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக 50 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைசெயலாளர் தென்காசி ஜவகர், இயக்குனர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.