ரோட்டில் தக்காளி குவியல்: ஜாம், சாஸ் செய்திருக்கலாம், ஆனால் போதிய வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லையே - குமுறும் கோவை விவசாயிகள்

தக்காளி அதிகம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளை மையப்படுத்தி குளிர்பதன கிடங்கு வசதியுடன் தொழிற்சாலை அமைத்து தக்காளி ஜூஸ், சாஸ், வத்தல் போன்றவற்றை தயாரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நட்டத்தை ஈடுகட்ட ஏக்கருக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கொடுக்க வேண்டும், தக்காளி மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய பதன கிடங்கு வசதியுடன் தொழிற்சாலையை உடனே அமைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: பொதுவாக தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அந்தந்த துறையினர் தான் லாபத்துடன் விலை நிர்ணயம் செய்வார்கள். ஆனால், வேளாண்துறை மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஏனென்றால், லாபமோ, நஷ்டமோ எதுவானாலும் அதனை தீர்மானிக்கும் வல்லமை பெரும்பாலும் இடைத்தரகர்கள் வசமே உள்ளது.

இடைத்தரகர்கள் தான் எஜமானர்கள்..!

சந்தையில் கணிசமான தொகைக்கு விளை பொருட்கள் விற்கபட்டாலும், அதன் கொள்முதல் விலை என்னவோ சொர்ப்பமாக தான் இருக்கின்றன. இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்களுக்கு சில நேரங்களில் போதிய விலை கிடைக்காமல், விலை வீழ்ச்சியால் பெருத்த நட்டமடைகின்றனர்.

இவ்வாறு நஷட்டமடைய செய்யும் விளை பயிர்களில் முதன்மையான இடம் வகிப்பது வெங்காயம் மற்றும் தக்காளி. விளைச்சல் அதிகமானாலும், அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி ஆனாலும், தக்காளி, வெங்காயம் விலை வீழ்ச்சியை சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது.

அப்படிப்பட்ட விலையை பெரும்பாலும் நிர்ணயிப்பது காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளோ அல்லது அரசாங்கமோ அல்லது நுகர்வோரோ அல்ல. வேளாண் பொருள்களை பொறுத்தவரை எவ்வளவு தொகைக்கு கொள்முதல், விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவு இடைத்தரகர்களின் வசமே இருக்கின்றன. வேளான் வர்த்தகத்தில் பெரும்பாலும் இடைதரகர்களே எஜமானர்களாக கோலோச்சுகின்றனர் என்றால் அது மிகையாகாது.

விலை வீழ்ச்சிக்கு வித்திட்ட அமோகமான விளைச்சல், அண்டை மாநில அறுவடை வரத்தும்...!

நடப்பாண்டில், தக்காளி விளைச்சளுக்கு உகந்த மழை மற்றும் சீதோஷன நிலை அமைந்ததனால், தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. அதேபோல, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தக்காளி சாகுபடி அமோகமாக நடந்திருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் அதிக தக்காளி விளைச்சல் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளிகள் தமிழ்நாட்டு சந்தைக்கு வந்துள்ளன.

பார்க்கும் இடமெல்லாம் தக்காளிகள் விற்பனைக்காக குவிக்கப்படுள்ளதால், தற்பொழுது தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், தக்காளி நடவு செய்து அறுவடை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் நட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

என்ன சொல்கிறார்கள் விவசாய சங்க பிரதிநிதிகள்...?







தரையில் கொட்டும் அளவுக்கு தக்காளி விலை வீழ்ச்சி குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமியிடம் சிம்பிளிசிட்டி செய்தி குழு பேசியது. அப்போது அவர், தொடர்கதையாகி வரும் இப்பிரச்சனைக்கு முக்கிய தேர்வு, மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் அமைப்பது தான் என்றார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, சூலூர், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகின்றன. நடப்பாண்டில் மட்டும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இப்பகுதிகளில் தக்காளி நடவு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆறு மாத கால பயிரான தக்காளி தற்பொழுது அமோகமாக விளைந்து அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு கொள்முதல் விலை ரூ.54, இவ்வாண்டு ரூ.5...!

விளைச்சல் அமோகமாக இருந்தாலும், விலை போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. கடந்த ஆண்டு 54 ரூபாய்க்கு அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்பட்டு, 75 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்து 20 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்.

வாங்க ஆளில்லை, நடு ரோட்டில் கொட்டுவதை தவிர வேறு வழியில்லை - விவசாயிகள் குமுறல்







அதாவது, விவசாயிகளிடமிருந்து தக்காளி ஒரு கிலோ ரு.5 முதல் ரூ.7 வரை இடைத்தரகர்கள் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளி விளைச்சல் அதிகமானதாலும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திராவிலிருந்து அறுவடை செய்யப்பட்ட தக்காளிகள் தமிழ்நாடு சந்தைக்கு விற்பனைக்கு வருவதாலும், தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றது.



இதனால் பெருத்த நட்டமடைகின்ற விவசாயிகள் தக்காளியை கேட்பாடற்று சாலையில் கொட்டி செல்கின்றனர்.

அரசாங்கமே கொள்முதல் செய்து நியாவிலை, கூட்டுறவு, உழவர் சந்தைகள் மூலம் விற்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட பிரதிநிதி தொண்டாமுத்தூர் பெரியசாமியிடம் பேசினோம். அவர் பல்வேறு விடயங்களை பட்டியலிட்டு விளக்கினார்.



அதாவது, சந்தையில் தக்காளி விற்கப்படும் போது அதன் விலை 25 ரூபாய் என்றால் அதன் கொள்முதல் விலை என்னவோ ரூ.5 ஆகவே இருக்கின்றது. இதில், இடைத்தரகர்கள் ரூ.15 முதல் ரூ.20 வரை நிகர லாபம் பெறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து இடைத்தவர்களுக்கு பதிலாக, அரசாங்கமே தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

எடுத்துக்காட்டுக்கு, 5 ரூபாய்க்கு இடைதரகர்களால் கொள்முதல் செய்யப்பட்டு 20 முதல் 25 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். இதையே அரசாங்கம், 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்து அதே 25 ரூபாயக்கு சந்தையில் விற்கலாம். அப்போது, விவசாயிகளுக்கு கிலோவுக்கு 10 ரூபாயும், அரசாங்கத்துக்கு கிலோவுக்கு 10 ரூபாயும் லாபம் கிடைக்கும்.

இதில், போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் என 5 ரூபாய் கழித்தாலும், அரசாங்கத்துக்கு என்னவோ கிலோவுக்கு 5 ரூபாய் வருமானம் கிடைக்கும். எனவே, அரசாங்கம் நேரடியாக கொள்முதல் செய்யும் தக்காளி உள்ளிட்ட விளைப் பொருட்களை கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடைகள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்யலாம்.

கேட்பாரற்று கிடக்கும் நடமாடும் மதிப்பு கூட்டு யூனிட். கேட்டு, கேட்டு சலித்துப்போன விவசாயிகள்.

தக்காளி விளைச்சல் அதிகமாகும் காலகட்டத்தில், தக்காளி மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க நடமாடும் பிராஸஸிங் யூனிட் (Processing unit) அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒரே பிராஸஸிங் யூனிட், பூலுவாம்பட்டியில் உள்ளது.

ரூபாய் 60 லட்சம் பொருட்செலவில் அமைத்திருக்கும் அந்த தக்காளி மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்கும் பிராஸஸிங் யூனிட் இன்றுவரை செயல்படாமல் கேட்பாரற்று உள்ளது.

வேளாண் விற்பனை துறைக்கு தரப்பட்ட இந்த பிராஸஸுங் யூனிட் உழவர் உற்பத்தி சங்கத்துக்கு உள் வாடகைக்கு தரப்பட்டுள்ளது. ஆனால், அவர்களும் இந்த பிராஸஸிங் யூனிட்டை பயன்படுத்திய பாடில்லை.

முறையாக பயன்படுத்தினால், நாள் ஒன்றுக்கு ஒரு டன் தக்காளியை பிராஸஸிங் செய்ய முடியும். அதன் மூலம், தக்காளி சாஸ், ஜீஸ், வத்தல் செய்து தக்காளி மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க முடியும்.

எனவே, அந்த பிராஸஸுங் யூனிட்டை முறையாக பயன்படுத்த கோரி, கேட்டு கேட்டு சலித்துப்போன தக்காளி விவசாயிகள் தற்போது அந்த பிராஸஸிங் யூனிட்டையே மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பதனக்கிடங்கு வசதியுடன் தக்காளி மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.







கடும் விலை வீழ்ச்சியின் காரணமாக, கிலோ கணக்கில் தக்காளிகள் ரோட்டில் கொட்டப்பட்டும், தக்காளி பறிக்கப்படாமல் ஆடு மாடுகளுக்கு இரையாக விடப்படும் என இந்த அவல நிலையை மாற்ற, சந்தையில் நுகர்வோர் விற்பனை போக, மீதம் இருக்கின்ற தக்காளியைக் கொண்டு தக்காளி மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

அதாவது, தக்காளி அதிகம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளை மையப்படுத்தி தொழிற்சாலை அமைத்து தக்காளி ஜூஸ், சாஸ், வத்தல் போன்றவற்றை தயாரிக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில், அந்நிய செலவாணியும் அதிகரிக்கும்.

மேலும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலையும் கிடைக்கும். இதனால், விவசாயம் சார்ந்த தொழில் மேம்படும், வேலைவாய்ப்பும் பெருகும்.

சாகுபடியை சந்தைக்கு எடுத்துச்செல்லாமல், குவியல் குவியலாக ரோட்டில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு, ஊருக்கே உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, தக்காளி பதனக்கிடங்கு மற்றும் தக்காளி மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைத்து வேளாண் குடிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை மாவட்ட விவசாயிகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...