உர உற்பத்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து: கோவையில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா நிறுவனத்தின் உரம் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் அனைத்து கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கடந்த 1955-ஆம் ஆண்டு, கோவை துடியலூர் பகுதியில் துவங்கப்பட்ட டியூகாஸ் நிறுவனம் (The Thudiyalur Co-Operative Agricultural Services Limited) விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு உரங்களை உற்பத்தி செய்து வந்தது.

13 வருவாய் கிராமங்களையும், 56 குக்கிராமங்களையும் செயல் எல்லையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் குறைந்த விலைக்கு உரங்களை விற்று வந்தது.

இந்த நிலையில், பல லட்சம் விவசாயிகளுக்கு உரங்களை அளித்து வரும் ஆசியாவிலேயே மிகப்பெரிய விவசாய கூட்டுறவு சங்கமான டியூகாஸ் நிறுவனத்தின் உர உற்பத்தி உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



துடியலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளைய ஒன்றிய செயலாளர் எம்.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாஜக அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...