கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் அதிகாலை நிலவிய கடும் பனிப்பொழிவின் காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே பயணித்தனர்.
கோவை: வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் குறைந்த பட்ச வெப்பநிலையானது 5 டிகிரியாகவும் பதிவானது.
இதன் காரணமாக சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனர்.
மேலும் கிராமப்புற சாலைகளிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.