கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை டாடாபாத் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து சங்கங்களின் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுக்குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அவை பின்வருமாறு,.

1) தமிழகத்தில் உள்ள அனைத்து மேக்ஸ் கேப் வாடகை வாகனங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் 19+1 சீட் பர்மிட் வழங்க வேண்டும்.

2) அண்டை மாநிலங்களுக்கு வாடகை வாகனங்கள் செல்லும் போது மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் முன்பு நடைமுறையில் இருந்தது போலவே தற்காலிக அனுமதி சீட்டு வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்

3) பிற்காலத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் ஆன்லைனில் தற்காலிக வெளிமாநில அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யும் முறையை தமிழக அரசு எளிமைப்படுத்த வேண்டும்,

4) சொந்த வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதை காவல்துறை உதவியுடன் பிடித்துக் கொடுத்தால், ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டவிதிப்படி அபராதம் விதிக்க வேண்டும்.

5) சாலைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் வாடகை வாகனங்களை சாலைகளில் தடுத்து நிறுத்தி ஏதாவது ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி ஓட்டுனர்களுக்கு அபராதம் என்ற பெயரில் 5000, 10000, அபராதம் விதிப்பதை திரும்ப பெற வேண்டும்.

6) வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களை உயர்த்துவதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

7) டீசல், பெட்ரோல் விலை உயர்வை குறைத்து ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசை தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.

8) குடும்ப அட்டை வைத்துள்ள வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழிவகை செய்து தர வேண்டும்.

9) RTO அலுவலகத்திற்கு எப்சிக்கு செல்லக்கூடிய வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி சிறந்தமுறையில் இருக்கும் பட்சத்தில் மாற்றுக்கருவி பொருத்த வேண்டும் என்று கூறும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10) சுற்றுலா தளங்களில் ஓட்டுநர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு விரைந்து நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



வாடகை வாகன ஓட்டுனர்களின் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாடகை வாகன உரிமையாளர்களின் இந்த போராட்டத்தின் காரணமாக கோவை மாவட்டத்தில் வாடகை வாகனங்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...