கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் ஆளுமை திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இப்பயிற்சியினை நிறைவு செய்பவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.


கோவை: மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடன் (District Collectors Internship Programme) கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது:-



மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் என்பது கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் இளம் ஆர்வலர்கள் மாவட்ட நிருவாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன் வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியானது அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 நாட்களும், நீண்டகால பயிற்சியானது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 5 மாதங்களும் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சித் திட்டத்தின் குறுகிய கால பயிற்சியில் 25 மாணவர்களும், நீண்டகால பயிற்சியில் 6 மாணவர்களும் தேர்வு பெற்றனர்.

இன்றைய தினம் நடைபெற்ற கலந்தாய்வில் 28 மாணவர்கள், நபர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இதனைத்தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்படவுள்ளது.

அக்கூட்டத்தில் அலுவலர்கள் தங்கள் துறைகளில் கூட்டம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், தங்களின் பணி குறித்தும் விளக்கவுள்ளனர்.

இந்த பயிற்சிகளை முறையாக பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் ஆளுமை திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பயிற்சியினை நிறைவு செய்பவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி டாக்டர் அலர்மேல்மங்கை, உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோகிலா, குமரகுரு பண்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் பாலு, முதல்வர் விஜியா கென்னடி, அண்ணா பல்கலைக்கழக டீன் எம்.ரத்தினசாமி, யுவ இந்தியா சேர்மன் கே.ஏ.குரியாச்சன், ரோட்டரி டெக்ஸ்சிட்டி தலைவர் விஜய் ராமசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...