திருப்பூரில் நாளை புதிய பேருந்து நிலையம் திறப்பு - முதலைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருந்த புது பேருந்து நிலையம் மற்றும் பிற நான்கு கட்டிடங்களில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அவற்றை திறந்து வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.



திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றின் ஒவ்வொரு பணிகளும் நிறைவடைந்து செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மீன் சந்தை திறக்கப்பட்டு ரூ.1.41 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



மேலும் அதே நேரத்தில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு மீண்டும் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த நிலையில் அதன் பணிகளும் நிறைவடைந்துள்ளன.



மேலும் அதேபோல 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்தும் கட்டிடம் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.



மேலும் வாரச்சந்தை மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பூ மார்க்கெட் உள்ளிட்டவையும் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது.



திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருந்த இப்பணிகள் நிறைவடைந்தது செயல்பட தயார்நிலையில் உள்ளதால் நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக புது பேருந்து நிலையம் மற்றும் பிற நான்கு கட்டிடங்களையும் திறந்து வைக்க உள்ளார்.



அதனை சிறப்பிக்கும் வகையில் அப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...