பணிக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் தொடர் மனு அளிக்கப்பட்டும் குட்டை தூர்வார படாததால் விவசாயிகள் தர்ணா

பணிக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் கழிவுகளால் மண்டி கிடக்கும் எலந்த குட்டையை சுத்தம் செய்து தூர்வாருமாறு பலமுறை மனு அளித்தும் சரியாக நடவடிக்கை எடுக்கபடாததால் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிகை எடுப்பதாக உறுதியளித்ததால் தர்ணா கைவிடப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில் சுத்தம் செய்யாமல் கழிவுகள் நிரம்பி இருக்கும் எலந்த குட்டையை மீட்டுதரக்கோரி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எலந்த குட்டை உள்ளது. இக்குட்டையானது 300க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக எலந்த குட்டை முழுவதும் புதர்கள் மண்டி ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. மேலும் ஊராட்சியின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கோழி இறைச்சி கழிவுகள் குப்பைகள் உள்ளிட்டவை இங்குதான் கொட்டப்படுகின்றன.

இதனால் புதர் மண்டி ஆக்கிரமிப்புகளாலும் கழிவு குப்பைகள் கொட்டப்பட்டதாலும் குட்டை மாசடைந்து, நீர் ஆதாரத்தை இழந்துள்ளது. குட்டையை தூர் வார வேண்டும் என்றும், கழிவுகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியாவிடம் மனு அளிக்கப்பட்டது.

இதை அடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குட்டை தூர்வாரும் பணி துவங்கியது. பணிகள் அரைகுறையாக நடந்த நிலையில், கூடிய நிதி ஆதாரமில்லாததால் பணிகளை மேற்கொள்ள இயலாது என ஊராட்சி நிர்வாகம் பணிகளை கைவிட்டதாக கூறப்படுகிறது.



இதையெடுத்து அப்பகுதி விவசாயிகள் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:

குட்டையை தூர்வாரி கழிவுகள் குப்பைகளை அகற்ற வேண்டும் என கடந்த ஒரு மாதமாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வந்தது. திடீரென இன்று நிதி ஆதாரமில்லாததால் பணிகளை மேற்கொள்ள இயலாது என ஊராட்சி நிர்வாகம் கூறிவிட்டது.



வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்ரியாவிடம் கேட்டால், ஊராட்சியில் நிதி இல்லை என்றும் வண்டிக்கு டீசல் அடிக்கவும் பணம் கிடையாது எனவும் கூறுகிறார். எனவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். குட்டையை முழுமையாக தூர்வாராவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.



தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா மற்றும் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குட்டையை தூர்வார உத்தரவிட்டு கடிதம் அளிப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதால் விவசாயிகள் தர்ணாவை கைவிட்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...