வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தனக்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற மாற்றுதிறனாளியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரவேண்டும் என மனு அளித்த நிலையில் தாமதமானதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றத்திறனாளியான தனக்கு தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.
ஆனால் மனு அளித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தனக்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அவரிடம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வாக்களித்து விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.