திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் எந்த விதமான விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனையும் மீறி பல்வேறு அமைப்பினர் தங்கள் விளம்பர பதாகைகளை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்புகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு பதாகைகளை தவிர எந்த ஒரு பதாகைகளும் இடம் பெறக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் கூட பல்வேறு அமைப்பினர் மட்டுமின்றி திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் தங்களது விளம்பரப்பதாகையை ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் வைத்துள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.