கூடுதல் கட்டணம், அபராதம் வசூலிக்கும் சேரன் கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கல்லூரி மாணவிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் படியூர் பகுதியில் சேரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கல்வி கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட இயலாவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள், கூடுதல் கல்வி கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.