வங்கி மோசடி குறித்த ரிசர்வ் வங்கியின் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நீலகிரி ஆட்சியர் அம்ரித்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ரிசர்வ் வங்கி சார்பில், கலை நிகழ்ச்சிகள் மூலம் வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



நீலகிரி: நாடு முழுவதும் வங்கி மோசடி, செல்போனில் தொடர்பு கொண்டு மோசடி, பாமர மக்களிடம் ஏடிஎம் கார்டு எண்ணை பெற்று மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.



இதனை தடுக்க ரிசர்வ் வங்கி “தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் 2022” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.



கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



இன்று முதல் ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு வங்கி மோசடி குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட உள்ளன.

உதகை ஏடிசி, அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே வாடிக்கையாளர்களின் பொறுப்பு, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாளைய தினம் (22.11.2022) குன்னூர் மற்றும் கோத்தகிரி பேருந்து நிலையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் ப்ரௌசர், வெப்சைட், ஹேப்ஸ் குறித்தும், சோதித்தறியப்பட்ட நம்பகமான உலாவி, பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய இணையதளங்களை பயன்படுத்துதல், பணம் செலுத்தும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்து வைத்தல் மற்றும் தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணமாற்றம் செய்தல், பணம் செலுத்தும் போது பெறுபவரின் கோரிக்கை தகவல்களை சரிபார்த்தல்,

கடன் பற்று அட்டை பயன்படுத்தும் போது அட்டை மீது கவனம் செலுத்துதல், பரிவர்த்தனைக்கு பிறகு வரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனை தொகை சரியாக உள்ளதா, ரசீதுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற செய்யக் கூடியவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளன.

இதேபோல் பணப்பரிவர்த்தனையின் போது செய்யக்கூடாதவைகளான பொது இடங்களில் சாதனங்களை உபயோகித்து பரிவர்த்தனை செய்தல், பாதுகாப்பற்ற திறந்த வலைதள வசதிகளை உபயோகித்து பரிவர்த்தனை செய்தல், பின், ஓடிபி, கடவு சொல் ஆகியவற்றினை பகிர்ந்து கொள்ளுதல், முக்கிய தகவல்களை கைப்பேசியில் வைத்திருத்தல்,

அட்டை மற்றும் அட்டை குறித்த தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை குறித்தும், வங்கியின் வாடிக்கையாளர்களின் உரிமை, தவறுதலாக பணம் செலுத்தப்பட்டு இருந்தால் அதனை மீட்பது போன்றவற்றை குறித்தும் எடுத்துரைக்கப்பட உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கரூர் வைஸ்யா வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் ரவிக்குமார் மற்றும் வங்கியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...