நீலகிரி கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சோகம் - சக ஊழியர்கள் சாலை மறியல்

கூடலூரில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த தேயிலை தோட்ட பெண் ஊழியர் சந்திரம்மாள் உயிரிழந்த நிலையில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத மின் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் சாலைமறியல்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட சர்க்கார் மூளை பகுதியை சேந்தவர் சந்திரம்மாள் (45). இவர் அருகாமையில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் வழக்கம் போல் இன்று காலை தேயிலை தோட்டத்தில் பணியாற்றுவதற்காக சென்று பணியில் ஈடுபட்ட போது தேயிலை தோட்டத்தின் நடுவே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்திருப்பது தெரியாமல் அதனை மிதித்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சக தோட்ட தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர். இதனைதொடர்ந்து, தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.



இந்நிலையில், முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத மின்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனியார் எஸ்டேட் நிர்வாகம் உயிரிழந்த சந்திரம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கூடலூர் - கேரள நெடுஞ்சாலையில் சக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...