கோவை அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு..!

ஒத்தக்கால்மண்டபம் ஏழூர் பிரிவு அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்த மூவரை அவ்வழியாக வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பாதுகாப்பு வாகனத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (72). இவர் கோவை மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஒத்தக்கால்மண்டபம் ஏழூர் பிரிவு அருகே வந்த போது, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் சீனிவாசன் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்டு, சீனிவாசன் மற்றும் மோதிய வாகனத்தில் வந்த தயா மற்றும் முகமது தவ்ஃபிக் ஆகியோர் காயமடைந்தனர்.



அப்போது, அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக தனது கான்வாயை நிறுத்தி இறங்கி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க்கும் நடவடிக்கையில் இறங்கினார்.



உடனே ஆம்புலென்ஸுக்கு தகவல் அளித்த நிலையில், விபத்தில் சிக்கிய மூவரை தனக்கு பாதுகாப்புக்கு வந்த எஸ்கார்ட் போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு, ஆம்புலன்ஸ்காக காத்திருக்காமல் தனது எஸ்கார்ட் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் வெகுவாக பாராட்டினார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...