கோவை குனியமுத்தூர் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் வழிப்பறி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

குனியமுத்தூர் - சுண்டக்காமுத்தூர் சாலையில் நின்றிருந்த நிதி நிறுவன ஊழியர் சபரிநாதனின் செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிர தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவர் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சபரிநாதன் குனியமுத்தூர் - சுண்டக்காமுத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சபரிநாதன் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சபரிநாதன் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து, செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...