சமூக வலைத்தளங்களில் இருபிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை - கோவை மாநகர காவல்துறை

மதத்துவேசத்தை உண்டு பண்ணும் நோக்கில் பொய்யான தகவல்களை பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.


கோவை: சமூக வலைத்தளங்களில் இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டும் வகையில், தவறான தகவல்களை பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக கோவை மாநகரில் நடந்ததாகத் தெரிவித்து ஒரு அவதூறு தகவல் சமூக விரோதிகளால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

அந்த தகவலில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக மாற்று மதத்தை சார்ந்த ஒரு நபர் அவரது வகுப்பு தோழி மூலமாக முயற்சிகள் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த விபரம் தெரிந்து மேற்படி மாற்று மதத்தை சார்ந்த பெண் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், அத்துடன் டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இணைத்து பொய்யாக மதத்துவேசத்தை தூண்டும் வண்ணம் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

மேற்படி சம்பவம் கோவை போன்று வெவ்வேறு ஊர் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் இவ்வாறு பகிரப்படும் மேற்படி தகவலானது உண்மைத் தன்மையற்றது. இது போன்று சம்பவம் ஏதும் நடந்ததாக ஏதும் தெரியவரவில்லை.

மேலும் காவல்துறைக்கும் தனிப்பட்ட நபரிடம் இருந்தோ அல்லது எந்தவொரு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது ரகசிய தகவலாகவோ கூட எந்த தகவல்களும் வரவில்லை.

எனவே இச்செய்தியின் பின்னணியில் முழுக்க முழுக்க உண்மையற்ற தகவல்களை வேண்டுமென்றே இட்டுக்கட்டி, ஏதோ ஆதாயம் பெறும் உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் யாரோ சிலர் பரப்பியும் பகிர்ந்தும் வருவதாக தெரியவருகிறது.

இதுபோன்ற மதத்துவேசத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கில் பொய்யான தகவல்களை பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...