கோவை போத்தனூர் அருகே ரயில் மோதி கால்கள் துண்டாகி மூதாட்டி பலியான சோகம்

போத்தனூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி மூதாட்டி ஒருவர் இரு கால்களையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றுள்ளார். ரயில் வருவதை அறியாமல் மூதாட்டி கடக்க முயன்ற போது, ரயில் மோதியதில் மூதாட்டி இரண்டு கால்களும் துண்டாகி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருநத மக்கள், போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அலமேலு என்பது மட்டும் தெரியவந்தது.

இந்த நிலையில் மூதாட்டி மருத்துவமனையில் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே மூதாட்டி அலமேலு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ரயில் மோதி கால்கள் துண்டாகி இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...