கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை - இளைஞர் கைது..!

ஆனைக்கட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் படி தடாகம் போலீசார் நடத்திய சோதனையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மோகன் என்பவர் கைது.


கோவை: தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி சோதனை சாவடி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், தடாகம் உதவி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அந்த இளைஞரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் (21) என்பது தெரியவந்தது.

ஜேசிபி ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர், கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த மோகனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சோதனை சாவடிக்கு அருகிலேயே கஞ்சா விற்பனை நடந்து வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...