திருப்பூர் கல்லூரி சாலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வான ஆராட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலின் 63ஆம் ஆண்டு மண்டல பூஜை கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெற்ற ஆராட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் 63ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது.



இந்த மண்டல பூஜை விழாவின் முக்கிய நிகழ்வான ஆராட்டு விழா திருப்பூர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது.



இதில்ஐயப்பனுக்கு மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், குங்குமம், பால், தயிர் விபூதி, சந்தனம் உள்ளிட்ட ஏராளமான மங்கலப் பொருட்களைக் கொண்டு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோவிலில் உள்ள தெப்ப குளத்தில் கங்கை, காவேரி , பம்பை ஆற்று புனித நீரை ஊற்றியும், பன்னீர், இளநீர், ரோஜா, தாமரைமலர்கள் , வெட்டி வேர் ஆகியவை நிரம்பிய தெப்பகுளத்தின் மஞ்சள் நீரில், அபிஷேக பிரியன் ஐயப்பன் சாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.



இதில் திருப்பூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.



Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...