குரூப்-1 தேர்வு: கோவையில் தீவிர சோதனைக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி

கோவையில் குரூப்-1 தேர்வுக்காக 49 மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 9 மணிக்குள்ளாக வந்த தேர்வர்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பின்னர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 முதல் நிலைத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்காக கோவை மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 81 போ் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், 12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக் கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

இதனிடையே தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், காலதாமதமாக வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னதாக தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். ஆள்மாறாட்டம்நடப்பதை தவிர்க்கும் வகையில், தேர்வர்களின் ஹால்டிக்கெட் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதற்காக திருப்பூரில் 20 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்வில் பங்கேற்க 5,856 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,617 பேர் தேர்வில் பங்கேற்க வில்லை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...