கோவை அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா - மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாநகராட்சி ஆணையர்

கோவை‌ அரசு பொறியியல்‌ கல்லூரியில் நடைபெற்ற முதலாம்‌ ஆண்டு வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌, வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.



கோவை: கோவை‌ அரசு பொறியியல்‌ கல்லூரி கலையரங்கில்‌ நடைபெற்ற முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ பேசியதாவது, மனித வாழ்வில்‌ கல்லூரிக்‌ கல்வி பயிலும்‌ பருவத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்‌.

மேலும், மரபு சார்ந்த கல்வி முறைகளுடன்‌, மாணவர்களின்‌ தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்‌. கோவையில்தொழில்நுட்பங்கள்‌ அதிகளவில்‌ உள்ளது. மாணவ, மாணவியா்கள்‌ அனைவரும்‌ கல்வி மற்றும்‌ வாழ்க்கைக்கு தேவையான புதிய அனைத்து விஷயங்களையும்‌ கற்றுக்கொள்ள வேண்டும்‌.



புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில்‌ வெற்றி பெற்றாலும்‌, தோல்வியானாலும்‌ அதன்‌ அனுபவத்தை‌ கொண்டு மீண்டும்‌ முயற்சித்து வெற்றி காண வேண்டும்‌.மாணவ, மாணவிகள்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில்‌ சிறந்து விளங்கி வாழ்வில்‌ முக்கியமான பொறுப்பு வகித்து நாட்டிற்கு பெருமை சோத்து முன்னோடியாக விளங்க வேண்டும்‌.

கடின உழைப்பினால்‌ மட்டுமே வாழ்வில்‌ சிறந்து விளங்கி தங்களுடைய குறிக்கோள்களை அடைய முடியும்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப் பேசினார்.

இந்த விழாவில்‌ அரசு பொறியியல்‌ கல்லூரி முதல்வர்‌ தாமரை, பேராசிரியர்கள்‌ ராஜேந்திரன்‌,ரேவதி, முன்னாள்‌ மாணவர்கள்‌ சங்கத்தின்‌ செயலாளர் பிரசன்னா மூர்த்தி மற்றும் முதலாம் ஆண்டு மாணவ -மாணவிகள்‌ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...