கோவையில் ஆயுதப்படை காவலர்கள் செல்லும் வாகனங்களில் சிறிய நூலகம் - தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையர்.

காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு சென்று வரும் வாகனத்தில் சிறிய அளவிலான நூலகம் அமைக்கப்பட்டு உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக காவல் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டன. மேலும், காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே கோவையில் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பணி நிமித்தமாக அழைத்துச் செல்லும் வாகனங்களில் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.



தமிழ் இலக்கியங்கள், உரை நடை, கவிதைகள் அடங்கிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கத்தை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்து போலீசாருக்கு புத்தகங்களை வழங்கினார்.



துவக்க விழா நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விளையாட்டுப் போட்டிகள், போலீசாருக்கான உடற்பயிற்சி கூடம், நூலகம் ஆகியவை காவல் நிலையங்களிலேயே அமைக்கப்பட்டன.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகம் மூலமாக வெளியூர்களுக்கு பணிக்கு செல்லும் காவலர்கள் பணி முடிந்ததும், புத்தகங்களை எடுத்து படிக்க முடியும்.

இவ்வாறுமாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...