கல்லூரி ஆசிரியர்கள் கண்ணியமான உடைகளை அணிவதை உறுதி செய்க - உறுப்பு கல்லூரிகளுக்கு பாரதியார் பல்கலை சுற்றறிக்கை

உயர்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு கல்லூரி ஆசிரியர்களும் சீருடை போன்ற கண்ணியமான உடைகளை அணிய உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை உறுதி செய்யுமாறு உறுப்பு கல்லூரிகளுக்கு பாரதியார் பல்கலை சுற்றறிக்கை.


கோவை: கல்லூரி ஆசிரியர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும் என உறுப்பு கல்லூரிகளுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதித்து உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை துணைச் செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும்.

பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும்.

பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவை தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைகழகம் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்லூரிக்கு வரும் ஆசிரியர் சீருடை போன்ற கண்ணியமான உடை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...