போக்சோ வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 72 வயது முதியவர், கோவை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் ரங்கசாமி(72). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ரங்கசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து ரங்கசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...