கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகேசன் பணியிடை நீக்கம் - பெண் ஊழியர் அளித்த பாலியல் புகார் மீது ஆட்சியர் நடவடிக்கை

பெண் ஊழியர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் முருகேசன்.



இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், துறை அலுவலர்கள் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, பெண் ஊழியர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் ஒரு புகாரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். அதை விசாரித்த ஆட்சியர் சமீரன் உதவி இயக்குனரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து அலுவலக அதிகாரிகள் கூறும் போது: அரசு துறை அலுவலங்களில் ஏராளமான பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களுக்கு பல விதங்களில் பாலியல் தொந்தரவு ஏற்படுகிறது. அவர்கள் புகார் தெரிவிக்க ஆட்சியர் தலைமையில் விசாகா கமிட்டி செயல்படுகிறது.

ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அனுப்பியிருந்தார். அதன் உண்மை தன்மையை நிரூபிக்க வீடியோவும் சமர்ப்பித்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

முதல் கட்டமாக நிர்வாக ரீதியாக உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். புகார் உண்மையாக இருப்பின், துறை ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...