கோவை பெரிய தடாகம் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: பெரிய தடாகம் கோவில்பிரிவு பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவரது உடைமைகளை ஆய்வு செய்தபோது கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசாரிடம் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கைதான இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பதும் கோவில் பிரிவு பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.