கோவை மேற்கு மண்டலத்தில் சாலை அமைக்க இடம்‌ வழங்கியவர்களுக்கு மேயர், மாநகராட்சி ஆணையாளர் நேரில் நன்றி

கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்த நிலையில், வார்டு என் 43-க்குட்பட்ட கவுண்டசாமி நாயுடு வீதி-பொங்காளி கோணார்‌ வீதிகளை இணைத்து புதிய சாலை அமைக்க இடம் வழங்கியவர்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.43-க்குட்பட்ட சுப்ரமணியபுரம்‌, வெங்கிட்டாபுரம்‌, புவனேஸ்வரி நகரில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் நேரில்‌ ஆய்வு செய்து, புதிதாக வார்டு அலுவலகம்‌ கட்டுவதற்கும்‌ உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும்‌, மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாருவதற்கும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



இந்த நிகழ்வில் உதவி ஆணையாளர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்.

இதேபோன்று சுப்ரமணியபுரம்‌, வெங்கிட்டாபுரம்‌, புவனேஸ்வரி நகர் பகுதிகளில் நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட உதவி நகரமைப்பு அலுவலருக்கு ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்‌. இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.



இதனைதொடர்ந்து புவனேஸ்வரி நகரில்‌ 25 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ நகர்நல மைய கட்டடப்பணியினை மாநகராட்சி ஆணையாள பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோன்று புவனேஸ்வரி நகரில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத நுண்ணுயிர்‌ உரம் தயாரிக்கும்‌ மையத்தை பார்வையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளர்களுக்கு ஆணையாளர்‌ பிரதாப்‌ அறிவுறுத்தினார்‌. இந்த நிகழ்வில் உதவி ஆணையாளர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.



இதனைதொடர்ந்து புவனேஸ்வரி நகரில்‌ சுமார்‌ 200 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால்‌ அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் அறிவுறுத்தினார்‌. இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனிடையே வார்டு எண் 43-க்குட்பட்ட கவுண்டசாமி நாயுடு வீதி-பொங்காளி கோணார்‌ வீதி ஆகிய இரண்டு வீதிகளையும் இணைத்து போக்குவரத்து வசதிக்காக ஈஸ்வரன்‌ செட்டியார்‌, கிருஷ்ணன்‌ செட்டியார்‌ ஆகியோர் சார்பில்‌ வழங்கப்பட்ட 4 3/4 சென்ட்‌ இடத்தில்‌ மாநகராட்சி சார்பாக 3 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட கான்கிரீட்‌ சாலையை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டனர். மேலும் சாலை அமைக்க இடம்‌ வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்‌. இந்த நிகழ்வின்போது மாமன்ற உறுப்பினர்கள்‌ மல்லிகா, சம்பத்‌, பிரவீன்ராஜ்‌, உதவி ஆணையாளர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...