கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

சாலையை விரிவாக்கம் செய்வதாலும், நான்கு மற்றும் ஆறு வழி சாலைகள் அமைப்பதாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை - அவிநாசி சாலையில் உள்ள நவஇந்தியா சந்திப்பு பகுதியில் Radisson Blu கூட்டரங்கத்தில்‌ சாலை வடிவமைப்பு மற்றும்‌ வாகன நிறுத்துமிடம்‌ மேலாண்மை கொள்கை கலந்தாய்வுக்‌ கூட்டம் நடைபெற்றது.மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல்‌ ஆணையாளர்‌ பாலகிருஷ்ணன்‌ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப் பேசியதாவது, கோவை நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைத்து இடங்களிலும்‌ சவாலாக உள்ளதாக கூறினார். கொரோனா காலத்திற்கு முன்பை விட தற்போது அதிக வாகனங்கள்‌ பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சாலையை விரிவாக்கம்‌ செய்வதாலும்‌, நான்கு மற்றும்‌ ஆறு வழி சாலைகள்‌ அமைப்பதாலும்‌ வாகன நெரிசலை கட்டுக்குள்‌ கொண்டுவர முடியும் என கூறினார்.

மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில்‌ பொதுமக்களுக்கு வாகன நிறுத்துமிடங்கள்‌ அமைக்கப்பட்டும்‌, வாகனங்களை சாலைகளிலும்‌, நிறுத்த அனுமதி இல்லா இடங்களிலும் வாகனங்களை பலரும் நிறுத்துவதாக கூறிய ஆணையாளர் பிரதாப், ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து நகரமைப்பு பிரிவு மூலம்‌ மீட்டெடுத்து வாகன நிறுத்துமிடம்‌ அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.



கூட்டத்தில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார் பேசியதாவது, கோவை மாநகராட்சியில்‌ மக்கள்‌ தொகை அதிகமாக இருப்பதால்‌, போக்குவரத்து நெரிசலும்‌ அதிகமாக உள்ளதாக கூறினார். சரியான முறையில்‌ வாகனங்களை நிறுத்தாமல்‌ சாலைகளில்‌, அனுமதியற்ற இடங்களிலும்‌ நிறுவத்துவதினாலேயே போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படுவதாக கூறிய அவர், எனவே பொதுமக்கள்‌ காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து சரியான முறையில்‌ வாகனங்களை நிறுத்தினால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.



கூட்டத்தில் மாநகர காவல்‌ ஆணையாளார்‌ பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது, தேவையற்ற மற்றும்‌ அனுமதியற்ற இடங்களில்‌ நிறுத்தப்படும் வாகனங்களினால் தான் போக்குவரத்து நெரிசல்‌ அதிகமாக ஏற்படுவதாக கூறினார். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய களஆய்வு செய்து நிரந்தரமாக காண வேண்டும் என்று கூறிய அவர், அபராதம்‌ விதிப்பது மட்டும்‌ தீர்வாகாது என்றும் அதனை முறைபடுத்துவது அவசியம் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, மாநகர போக்குவரத்து துணை காவல்‌ ஆணையர் அசோக்குமார்‌, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, நகரமைப்பு குழு தலைவர்‌ சோமு, மாமன்ற உறுப்பினர்‌ கார்த்திக்‌ செல்வராஜ்‌, அழகு ஜெயபாலன்‌, சுமா, முனியம்மாள்‌, மாநகராட்சி செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...