கிணத்துக்கடவு - கோவை சாலையில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு-சர்வீஸ் சாலை மூடப்பட்டதால் பயணிகள் அவதி

கிணத்துக்கடவு - கோவை சாலையில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிக்காக சர்வீஸ் சாலை மூடப்பட்ட நிலையில், போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டதால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு பேருந்துகளில் பயணித்தோர் தள்ளப்பட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு - கோவை சாலையில் உள்ள சர்வீஸ் சாலை பகுதியில் நிலத்தடியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பாதிக்கபட்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சர்வீஸ் சாலை வழியாக செல்லும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சரி செய்யும் பணி நடைபெற்றது.



பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டபட்டு உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சர்வீஸ் சாலை மூடபட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.



இதனால் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி வந்த பேருந்துகள் கல்லாங்காட்டு புதூர் பகுதியிலேயே பயணிகளை இறக்கி விட்டுச் சென்றதால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிகள் நடந்தே கிணத்துக்கடவு பகுதிக்கு சென்ற நிலை ஏற்பட்டது.

சர்வீஸ் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படும்போது பகல் நேரத்தில் சரி செய்யும் பணி நடைபெறுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் இது போன்ற பணிகளை இரவு நேரங்களில் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...