தேங்காய் மூலம் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு மோசடி: கேரள தொழிலதிபரை கைது செய்த கோவை குற்றப்பிரிவு போலீசார்

தேங்காய் மூலம் மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த சஜீவ் கருண் என்பவர் கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்று ஏமாற்றிய நிலையில், அவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: நாட்டில் மோசடிகளுக்கு பஞ்சமில்லை. அதுவும் தற்போதுதலைதூக்கி வரும் சைபர் கிரைம் மோசடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்றால் அது மிகையாகாது. ஒருபுறம் காவல்துறையினர், மக்களிடையே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மறு புறம் மோசடிகளில் சிக்கி பணத்தை மற்றும் மன நிம்மதியை தொலைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

குறிப்பாக, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து பணத்தை தொலைப்பவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம். அப்படி, அதிக வட்டி, முதலீடு இரட்டிப்பாகும் என்ற ஆசையை தூண்டும் விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல், தேங்காய் மூலம் மதிப்பூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த ஏராளமானோர் ஏமாந்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெங்காநல்லூரை சேர்ந்தவர் சஜீவ் கருண். தொழில் அதிபரான இவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம்பட்டியில் ஜென் டு ஜென் என்ற பெயரில் தேங்காயை மூலப்பொருட்களாகக் கொண்டு பல்வேறு மதிப்பூட்டப்பட்ட உற்பத்தி பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் விளம்பரப்படுத்தி இருந்தார். இதனை நம்பிய பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் பரமசிவம் ஆகியோர், சஜீவ் கருண் நிறுவனத்தில் ரூ.1.25 கோடி முதலீடு செய்திருந்தனர். இதுபோல, பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக தெரிகிறது.

பலரிடமிருந்து பணத்தை வசூலித்து விட்டு, உறுதியளித்த லாபத்தை கொடுக்காமல் சஜீவ் கருண் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனகராஜ் மற்றும் பரமசிவம், இது குறித்து பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட சஜீவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சஜீவ் கருணை விசாரணைக்கு உட்படுத்திய கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, அவர் மீது ஏற்கனவே கேரள மாநிலத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...