கோவை ஹோப் காலேஜ் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

அவிநாசி சாலை, ஹோப் காலேஜ் சிக்னல் அருகே கார் வந்த போது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து, உடனே காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் காரில் மளமளவென தீ பற்றியது.



கோவை: கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா. இவர் ஏடிஎம் ஃபீல்டு ஆபீஸராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கார் ஹோப் காலேஜ் சிக்னல் அருகே வந்த போது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து, உடனே சாலை ஓரமாக ஜோஸ்வா காரை நிறுத்தியுள்ளார். பின்னர் அனைவரும் காரை விட்டு வெளியேறினர்.



சிறிது நேரத்தில் காரின் முன் பகுதியில் இருந்து தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. தொடர்ந்துகார் முழுவதும் மளமளவென தீ பற்றியது.

தகவல் அறிந்து வந்த பீளமேடு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காரில் பயணித்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...