கோவை நல்லூர்பதி கிராமத்தில் நடமாடும் சிறுத்தையால் கடந்த 6 மாதத்தில் மட்டுமே 20க்கும் மேற்பட்ட ஆடு பலி விவசாயிகள் வேதனை

கோவை நல்லூர்பதி கிராமத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டுமே சுமார் 20க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் பலியான நிலையில் அதற்கு காரணமான சிறுத்தையால் மனித உயிருக்கு ஆபத்து வருவதற்க்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: சிறுவாணி சாலை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல் பகுதி நல்லூர்பதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அப்பகுதியிலுள்ள தனியார் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதுடன், அரசு வழங்கிய கரவை மாடு மற்றும் ஆடுகளை வளர்ப்பதும் ஆடு, மாடுகளை மேய்ச்சலில் விடுவதை தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அக்கிராம மக்கள் வளர்த்து வரும் ஆடு மற்றும் மாடுகள் காணாமல் போவதும், அடிக்கடி ரத்த காயங்களுடனும் அவை காணப்பட்டதையடுத்து சந்தேகமடைந்த கிராம வாசிகளுக்கு மேய்ச்சலின் போது அப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதை கண்டுபித்தனர்.

அந்த சிறுத்தையானது ஆடு, மாடுகளை அடிப்பதை தொடர் வழக்கமாக கொண்டுள்ளது தெரியப்பட்டது.



மேலும் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடு மாடுகளை அச்சிறுத்தை கொன்றுள்ள நிலையில் நேற்று மாலை வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்த பசுமாட்டினை தாக்கியுள்ளது.

சத்தம் கேட்டு அங்கு சென்ற கிராமவாசிகள் சிறுத்தையை விரட்டியுள்ளனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கபட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தியதுடன் தாக்கியது மர்ம விலங்கு என தெரிவித்துள்ளனர்.



நேரில் பார்த்த கிராம வாசிகள் ஆடு மாடுகளை சிறுத்தை தாக்கி கொன்றதாக எடுத்த கூறியும் வனத்துறையினர் சிறுத்தை தாக்கிய இடங்களில் அதன் கால் தடத்தை காட்ட கூறுவதாகவும் தெரிவித்த கிராமவாசிகள் வனத்துறையினர் ஆடு மாடுகளை தாக்கியது மர்ம விலங்கு என்று கூறுவதை குற்றம் சாட்டினர்.

பூர்வீகமாக குடும்பத்துடன் வசித்து வரும் தங்களை பாதுகாக்க வனத்துறையும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் ஆடு மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

ஆடு மாடுகளை இழந்தவர்களுக்கு அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் காருன்யா கல்வி நிறுவனம் யானை வழித்தடங்களை மறித்து 8 அடிக்கு கான்கிரீட் சுவர் அமைத்திருப்பதாகவும் அதனாலேயே வன விலங்குகள் கிராமம் மற்றும் தோப்பிற்குள் வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

வன விலங்குகள் ஊருக்குள் வருவதற்கு மேய்ச்சலின் போது யானை, காட்டு பன்றிகள் போன்ற வன விலங்குகள் காண நேரிட்டால் தப்பித்துகொள்ளலாம் ஆனால் சிறுத்தை பதுங்கி இருந்து தாக்குவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...