கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் அரசுக்கு சொந்தமான 25 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று மீட்டெடுத்தனர்.மேலும் மீட்டெடுத்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட தேரோடும் வீதியில் பொன்மலை வேலாயுதசாமி கோவில் அருகே 14 சென்ட் நிலமும், சிவலோக நாதர் கோவில் பகுதியில் 11 சென்ட் நிலமும் என மொத்தம் 25 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை தொடர்ந்து வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக புகார் வந்த நிலங்களை அளவீடு செய்தனர்.
அந்த அளவீட்டில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியாகின பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை உரிய நட்வடிக்கையில் மீட்டெடுத்தனர்.
பின்னர் வருவாய்த்துறையினரால் மீட்கபட்ட நிலத்தை சுற்றி இனி இதுபோல் நிகழாதவாறு கம்பி வேலி அமைக்கப்பட்டது.
இந்த பணியின் போது கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர் விமல் மாதவன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்து பார்வையிட்டனர்.