நீலகிரியில் தென்மேற்கு பருவமழை பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு - மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல்

தென்மேற்கு பருவ மழையின் போது, நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் 82 பணிகளுக்காக மொத்தம் 15 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.



நீலகிரி: தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த தென்மேற்கு பருவ மழையின் போது நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான இடங்களில் சுற்றுச்சுவர், தடுப்புச்சுவர், நடைபாதைகள், பாலங்கள் சேதமடைந்தன.

இதனைடுத்து மழை பாதிப்புகள் தொடர்பாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், மழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து துறை அலுவலர்கள் மூலம் கணக்கீடு செய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தனர்.

அதன்படி, குன்னூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி உள்ளிட்ட 30 பணிகளுக்கு ரூ.463.75 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும், கூடலூர் நகராட்சியில் சிறிய பாலம், தடுப்புச்சுவர், வடிகால் உள்ளிட்ட 35 பணிகளுக்கு ரூ.663.67 லட்சம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நெல்லியாளம் நகராட்சியில் வடிகால், நடைபாதை உள்ளிட்ட 17 பணிகளுக்காக ரூ.384.60 லட்சம் என மொத்தம் 82 பணிகள் ரூ.15 கோடி தேவைப்படுவதாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது மூலதன மானிய நிதியில் சேமிப்பு நிதியின் மூலம் மேற்கொள்ள நகராட்சிகள் துறையிடமிருந்து நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதால் பணிகள் விரைவில் தொடங்கப்படும்

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...