கோவையில் யுவ இந்தியா தொடக்க விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரோட்டரி டெக்ஸ்சிட்டி சார்பில் துவங்கப்பட்டுள்ள "யுவ இந்தியா" தொடக்க விழாவில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


கோவை: ரோட்டரி டெக்ஸ்சிட்டி சார்பில் துவங்கப்பட்டுள்ள "யுவ இந்தியா" தொடக்க விழா அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.



இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.



மேலும், இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவம் மற்றும் விமானப்படை கண்காட்சியை சிறப்பு அழைப்பாளர்கள் பார்வையிட்டனர்.



இந்த "யுவ இந்தியா" என்பது போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக துவக்கப்பட்டுள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்நிகழ்ச்சியில், ரோட்டரி இண்டர்நேஷனல் இயக்குனர் வெங்கடேஷ் உட்பட ரோட்டரி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...