கோவை மத்திய மண்டலம்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட கட்டுமானப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மத்திய மண்டலத்தில் நடைபெறும் கட்டுமானப்‌ பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.


கோவை: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, போதிய நிதி ஒதுக்கி அதிநவீன வசதிகள் கொண்ட நகரமாக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

பலகட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை நிர்வகிக்கும் வகையில் அனைத்து நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பார்வையின் கீழ் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரேஸ்கோர்ஸ்‌, தாமஸ்‌ பூங்கா, வாலாங்கும்‌ மற்றும்‌ உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ நடைபெற்றுவரும்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட கட்டுமானப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.71 (ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டு வரும்‌ மாதிரி சாலையின்‌ ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை தாமஸ்பார்க்‌ சந்திப்பில்‌ மீடியா டவர் அமைக்கும்‌ பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தாமஸ்‌ பூங்கா பகுதியில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை அமைக்கவும்‌, திறந்தவெளி பல்லடுக்கு இருக்கைகள்‌ அமைக்கவும்‌, எதிர்வரும்‌ மழை நாட்களை கருத்தில்‌ கொண்டு, பணிகளை திட்டமிட்டு விரைந்து முடிக்க வேண்டும்‌ என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைக்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ அரசு மருத்துவமனை பேருந்து திடலில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளா்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள்‌ பாதுகாப்பாக பேருந்து நிலையத்தில்‌ உபயோகப்படுத்துமாறு சுற்றுச்சுவர், கிரில்‌ வேலிகள்‌ அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, அங்கு பழுதடைந்த நிலையில்‌ உள்ள கழிப்பிடத்தை மராமத்து பணிகள்‌ செய்து பொதுமக்களின்‌ உபயோகத்திற்கு விடுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌ மத்திய மண்டலம்‌ வாலாங்குளத்தில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகளைளையும்‌, வாலாங்குளம்‌ வடகரையில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ அமைக்கப்பட்டுவரும்‌ நீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமானப்‌ பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணிகளான கற்றல்‌ மையம்‌, கழிவு சுத்திகரிப்பு நிலையம்‌ மற்றும்‌ கரை புனரமைத்தல்‌ பணிகளை நேரில்‌ சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளார் மு.பிரதாப்‌ சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, ஸ்மார்ட்‌ சிட்டி பொது மேலாளர்‌ பாஸ்கா்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ சுகந்தி, பி.௨மாதேவி, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...