நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்திய அரசின் புதிய போக்குவரத்து திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதில் பன் மடங்கு அபராத தொகையை திரும்ப பெறவும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் , வாகன FC, பர்மிட், இன்சூரன்ஸ் கட்டண உயர்வை சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோசமிட்டனர்.
நீலகிரி: ஒன்றிய அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் போக்குரவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம், தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளன.
பைக், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்கிறவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிக்னலை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிச் சென்றால் ரூ.500, 2வது முறை மீறினால் ரூ.1500 அபராதம், செல்போன் பேசியபடி ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மற்றும் புதிய போக்குவரத்து திருத்தத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய வாகன திருத்த சட்டத்தின் மூலம் உயர்த்தபட்டுள்ள பன் மடங்கு அபராத தொகையை திரும்ப பெற வேண்டும் எனவும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் வாகன FC, பர்மிட், இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என கூறியும் கோசமிட்டனர்.
மேலும் புதிய வாகன திருத்த சட்டத்தின் படி தலைக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதமாக உயர்த்தியது, அதிக பாரம் ஏற்றினால் 30 ஆயிரம் அபராதம், சீட்பெல்ட், சீருடை இல்லையென்றால் 1000 ரூபாய் அபராதம் உள்ளிட்ட பல்வேறு அபராதங்கள் விதிப்பதால் தங்களது தொழில் பாதிக்கபடுவதாகவும் எனவே புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறி கோத்தகிரியின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.