குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற'பேக்கத்தான்'

கோவையில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் கோவை வா.வு.சி. பார்க் கேட் முன்பு நடத்தப்பட்ட பேக்கத்தான் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் கோவை கிளை சார்பில் நடைபெற்ற மாபெரும் ' பேக்கத்தான்' நிகழ்ச்சியை கோவை வா.வு.சி. பார்க் கேட் முன்பு மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த 'பேக்கத்தான்' நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பின்நோக்கி பேரணியாக குறிப்பிட்ட பாதையில் நடந்து சென்றனர். கோவையில் உள்ள 8 கல்லூரிகளின் யுவா கிளப் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நமது மாவட்டம் முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய யங் இந்தியன்ஸ் அமைப்பினர்,குழந்தைகளுக்கு பாலியல் சமந்தமான சீண்டல்களில் இருந்து மீண்டு வர, அவர்களுக்கு உதவ நமக்கு அதிகாரமோ பணமோ தேவையில்லை, சமூக புரிதலும் நல்ல மனமும் இருந்தாலே போதும் என கூறினர்.



குழந்தைகள் எதேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் 1098 உதவி என்னை அழைத்தால் போதும், என்று கூறினர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகள் இடையேயும், பொது மக்களிடையேயும், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆகியோரிடம் யங் இந்தியன்ஸ் அமைப்பு எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குழந்தைகளிடம், பிறர் தங்களை தொடும் போது எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது என்பதை பற்றிய விழிப்பணர்வு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதே போல் பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைகளின் பெற்றோர்கள் இது சம்மந்தமாக அடுத்த கட்டமாக செய்ய வேண்டியவை என்ன என்கிற புரிதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் யங் இந்தியன்ஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...