டேன் டீ விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் வரும் 20ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை நேரடியாக கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிக்கையில் தகவல்.



நீலகிரி: டேன் டீ விவகாரத்தில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறித்த திமுக அரசை கண்டித்து வரும் நவம்பர் 20ஆம் தேதி கூடலூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய திருநாட்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியர்களின் கொடுங்கோல் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். 1823ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிய தமிழகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டனர்.

1948ஆம் இலங்கை நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அங்கு தேயிலை தோட்டங்களில் பணிசெய்ய இடம்பெயர்ந்த எம் தமிழ் மக்கள் நாடற்ற அகதிகளாக்கப்பட்டனர். 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கையெழுத்தான சாஸ்திரி மற்றும் பண்டாரநாயக்கே ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மலையகத்தில் வாழ்ந்த தமிழர்களை, தமிழகத்தில் மீள்குடியமர்த்த வழி வகை செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்தியத் தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில், குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் இன்று 15,076 (மக்கள் தொகை: 65,111) மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள், இன்றளவும் தமிழக அரசின் TAN TEA-ஐ மட்டுமே நம்பி வாழ்கின்றன.

ஆனால் TANTEA நிர்வாக இயக்குனர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதங்களின் படி, TANTEA வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை, TANTEA நிறுவனத்திற்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரைத்தார்.

நடுவட்டம் கோட்டம், வால்பாறை கோட்டம், குன்னூர் கோட்டம், கோத்தகிரி கோட்டம், பாண்டியர் கோட்டம், சேரங்கோடு கோட்டம், நெல்லியாளம் கோட்டம், சேரம்பாடி கோட்டம் என மொத்தம் 2152 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்படும் என TANTEA நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது பரிந்துரையில் கூறியிருந்தார்.

ஆனால், நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி, இந்த ஏற்பாட்டின் படி, TANTEA நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு ரூ.5.98 கோடிகள், மிச்சமாகும். இந்த சிறிய தொகைக்காக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அகதியாக்குவதா என்பதை கூட சிந்திக்கவில்லை இந்த திறனற்ற திமுக அரசு.

TANTEA நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டது.

அரசின் இந்த முடிவால் அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. TANTEA நிர்வாகம், வேலைக்காக வேறு தோட்டங்களுக்கு செல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்பதால் 2,400 குடும்பங்கள் மற்றும் 15,000 மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

தாயகம் திரும்பியதிலிருந்து, இந்த தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் இந்தியர்கள் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை, அதற்காக போராடவும் இல்லை. மேலும் அகதிகளுக்கு அரசாங்கம் வழங்கிய சிறிய குடியிருப்புகளில் அவர்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள்.

TANTEA நிறுவனத்தால் வழங்கப்பட்ட அகதிகளுக்காக கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு தற்போது நிர்பந்திக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, அந்தத் தோட்டத் தொழிலாளர்களில், தாமாக முன்வந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, வெளியேறும் போது கொடுக்கப்படவேண்டிய நிவாரணங்களும் அரசால் கொடுக்கப்படவில்லை.

இந்திய நாட்டை நம்பி வந்த அகதிகளுக்கு வேறு எங்கு செல்லவும் வாய்ப்புகளும் இல்லை. மக்கள் கேள்வி கேட்டால், அரசு அதிகாரிகள் தொழிலாளர்களை அலட்சியப்படுத்துகிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு TANTEA நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் வழக்கம் போல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, எம் மக்களை மீண்டும் அகதிகளாக்கியுள்ளது.

நான் இலங்கை சென்றிருந்த போது அங்கிருந்த மலையக தமிழர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு குடியுரிமை பெற்றும் எந்தவித வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் எம் மக்கள். இங்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அகதிகளாகவே வைத்துள்ளது தமிழக அரசு.  
 
திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். உடனடியாக அனைவருக்கும் மாற்று வேலைக்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். அனைவரையும் நட்டாற்றில் விட்டதுபோல வெளியேற்றுவது தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும். தற்காலிகமாக குடியிருப்புகளில் அவர்கள் வாழ இடம் மட்டும் கொடுப்பதால், அவர்களால் என்ன செய்ய முடியும்?
 
இப்படி எம் மக்களை வஞ்சிக்கும் இந்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்த மாதம் 20ஆம் தேதி ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பாஜக முன்னெடுக்கும். அதில் நானும் நேரடியாக கலந்துகொள்கிறேன், என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.  

இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...