கோவையில் 3 நம்பர் லாட்டரி விற்ற மூவர் கைது; துடியலூர் காவல் துறையினர் துரித நடவடிக்கை

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக 3 நம்பர் லாட்டரி விற்ற சாஜித், விக்னேஷ், பிரகாஷ் ஆகிய மூன்று பேரை துடியலூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



கோவை: ஓவர் நைட்டில் ஓஹோ என்று வந்து விடுவோம் என்ற எண்ணத்தில் லாட்டரி சீட்டில் முதலீடு செய்து லட்சக் கணக்கில் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்க தடை உள்ள நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில் கேரள லாட்டரி அதிக அளவில் விற்கப்படுகின்றன. போலீசார் கண்காணிப்பு காரணமாக, அவ்வப்போது கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லாட்டரி சீட்டு விற்க போலீசாரின் கெடுபிடி பெரும். தடையாக இருப்பதால், அதற்கு மாற்றாக உருவெடுத்தது தான் 3 நம்பர் லாட்டரி. கேரளா லாட்டரியின் வெற்றி எண்கள் நாள்தோறும் அறிவிக்கப்படுவதன் அடிப்படையில், முதல் பரிசு வென்ற எண்ணின் கடைசி மூன்று எண்ணே 3 நம்பர் சீட்டு லாட்டரி வெற்றி எண்ணாக நிர்ணயிக்கப்படுகிறது.

3 நம்பர் லாட்டரி

கடைசி மூன்று எண்ணை ஏ போர்ட், பி போர்ட், சி போர்ட் என்று பிரித்து லட்சக்கணக்கில் லாட்டரி சீட்டு டீலிங் நடந்து வருகின்றன. ஒவ்வொரு நம்பருக்கும் தனித்தனியே பணம் கட்டுவது முதல், இரண்டு நம்பருக்கு ஒரு பணம், மூன்று நபருக்கு ஒரு பணம் என தொகை மாறிக்கொண்டே செல்லும். அதன் அடிப்படையில், லாட்டரி அண்டர் டீலிங்கும் நடக்கின்றன.

போலீசாருக்கு ரகசிய தகவல்

பொதுவாக மூன்று லாட்டரி சீட்டு போடும் நபர்கள் முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறான மூன்று நம்பர் லாட்டரி விற்பதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற லாட்டரி வியாபாரிகளை போலீஸ் தேடி சென்றனர். அதன்படி, துடியலூர் போலீசாரின் துரித நடவடிக்கையில் மூன்று லாட்டரி விற்ற சாஜித், விக்னேஷ், பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய போது, மூன்று லாட்டரி சீட்டு உட்பட சட்ட விரோதமாக லாட்டரி உள்ளிட்ட சூது விளையாட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...