குனியமுத்தூர் வசந்தம் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்கிய நிலையில் அப்பகுதிக்குள் காட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது. அதை பிடிக்க பாம்பு பிடி வீரர்களுக்கு அறிவித்த நிலையில் தாமதமானதால் அப்பகுதி பெண்களே பிடித்து வனத்துக்குள் விட்டனர்.
கோவை: தமிழகம் முழுக்க மழை பெய்ந்து வரும் நிலையில் மழைநீர் தேங்கி பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. இதில் கோவை பகுதிகளில் மண்சரிவு ,மரம் சாய்தல் என பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.
இச்சூழலில் மழை காலம் முழுக்க தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மேலும் பெரும் இன்னல்கள் ஏற்பட்டு விடுகின்றன.
அடை மழை நீர் தேங்கி புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற சிரமப்படும் குடியிருப்பு வாசிகள் தற்பொழுது மேலும் சில ஆபத்தை பார்த்து அஞ்சுகின்றனர்.
மழை வெள்ளத்தில் சூழும் குடியிருப்புகளுக்குள் தேவையற்ற கசடுகள் வந்து செல்லும் நிலையில் பூச்சிகள் பாம்புகளும் புகுந்துவிடுகின்றன.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது.
அதில் சுமார் 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது. தண்ணீர் பாயும் பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் அங்கு பாம்பு பிடி வீரர் வராததால் அப்பகுதியில் உள்ள பெண்கள் பயமின்றி அந்த பாம்பை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து அருகில் உள்ள வனப் பகுதியில் விட்டனர்.